Header Ads Widget

Pop Ads

'Veerappan's tomb was dug and there was a 'sudden commotion".

வீரப்பனின் சமாதி தோண்டப்பட்டதால் திடீர் என்று பரபரப்பு ஏற்பட்டது ?

மேட்டூர், மூலக்காடு

         வீரப்பன் கடந்த 2004ம் ஆண்டு அக்டோபர் 18ம் தேதி தர்மபுரி அருகே தமிழக அதிரடிப்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார்

அவரது உடல் மேட்டூர் அருகே உள்ள மூலக்காடு என்ற இடத்தில் அடக்கம் செய்யப்பட்டது.இதுவரை வீரப்பனாரின் சமாதிக்கு சரியான  மண்டபவம் கட்டப்படவில்லை.


மணல் எடுத்தால்

           காவிரிக் கரையோரத்தில் இருக்கும் அவரது சமாதிக்கு 
வெளியூர்களில் இருந்தும் ஏராளமான பொதுமக்கள் வந்துவேடிக்கை பார்த்துவிட்டு செல்வது வழக்கம்.
       
 சிலர், சமாதியில் இருந்து மண்ணை எடுத்து செல்வதும்  உண்டு.              மேலும், ஒவ்வொரு ஆண்டும் வீரப்பனின் நினைவு நாளில்  அவரது மனைவி , மகள்கள் மற்றும் உறவினர்கள் சமாதிக்கு வந்து 
அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

 வீரப்பனின் ஆதரவாளர்களும் சமாதிக்கு வந்து அஞ்சலி  செலுத்திவிட்டு உறுதிமொழி எடுத்து செல்வார்கள்  இந்நிலையில் இரு தினங்களுக்கு முன் வீரப்பனின் சமாதி    தோண்டப்பட்டிருந்தது.
                                                                         சமாதியின் மீது சுமார் ஒன்றரை அடி உயரத்தில் குவிக்கப்பட்டிருந்த மண் முழுவதும் அகற்றப்பட்டிருந்தது.இது குறித்து தகவல்பரவியதும் வீரப்பனின் உறவினர்களும், பொதுமக்களும் அங்கு திரண்டனர். 
இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும் கடந்த 10 ஆண்டுகளில் அரசாங்கம் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.பல்வேறு கோரிக்கை வைக்கப்பட்டாலும் இன்னும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது வீரப்பன் ஆதரவாளர்களிடம் வருத்தம் அளிக்கிறது.



கருத்துரையிடுக

0 கருத்துகள்