வீரப்பனின் 'பரம்பரை சொத்தான பானை'
திருப்பூரில்: சந்தனக்கடத்தல் வீரப்பனின் பரம்பரை சொத்தான பானையை நான்கரை லட்சம்
கோடிக்கு விற்கப் போவதாகவும், டெல்லியில் உயர் அதிகார மட்டத்தினரின்
அனுமதி வேண்டி இருப்பதாகவும் கூறி திருப்பூரில் எட்டரை லட்சம் ரூபாய்
மோசடி அரங்கேறியுள்ளது.
 |
Veerappan |
திருப்பூர்
அனுப்பர்பாளையம் புதூரை சேர்ந்தவர் 39 வயதான
ராஜ்பிரதாப். கட்டுமான தொழிலுக்கு தேவையான பொருட்களை விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார்.
செவ்வாய்க்கிழமை
திருப்பூர் மாநகர காவல் ஆணையர்
அலுவலகத்தில் ராஜ்பிரதாப் புகார் ஒன்றை அளித்தார்.
அந்த புகாரில், கடந்த 2012-ஆம் ஆண்டு நவம்பர்
மாதம் வேலம்பாளையத்தைச் சேர்ந்த 42 வயதான ஜோதிடர் பரமேஸ்வரன்,
பணம் கேட்டு தன்னை அணுகியதாக
கூறியுள்ளார்.
பணம் கொடுக்க மறுத்ததால், வற்புறுத்திய திருப்பூரைச் சேர்ந்த ஆறுமுகத்தையும், அவரது நண்பர் தனபாலையும்,
பரமேஸ்வரன் ராஜ்பிரதாப்பிடம் அழைத்துச் சென்றுள்ளார்
வீரப்பனின் 'பரம்பரை சொத்தான பானை"
சந்தன
கடத்தல் வீரப்பனின் பரம்பரை சொத்தாக இருந்த ஒரு கலைநயமிக்க
பானை தங்களிடம் உள்ளதாக மூவரும் ராஜ்பிரதாப்பிடம் கூறி உள்ளனர்
நான்கரை
லட்சம் கோடி ரூபாய்க்கு விலைபோகும்
அந்த பானையை விற்பனை செய்வதற்காக
சில அரசாங்க நடைமுறைகள் இருப்பதாகவும் அதற்கு செலவு செய்ய
பணம் வேண்டும் என்றும் கேட்டுள்ளனர்.
கலைப்பொருள்
விற்பனை நிறுவனம் மூலம் பானையை விற்க
ஏற்பாடுகள் செய்திருப்பதாகவும் ஒரு வாரத்தில் பணம்
வந்து விடும் எனவும் ஆசை
காட்டியுள்ளனர்
மூவரின்
பேச்சை நம்பிய ராஜ்பிரதாப், 2012-ம்
ஆண்டு டிசம்பர் மாதத்தில் 4 தவணைகளாக எட்டரை லட்சம் ரூபாயை
கடனாகக் கொடுத்துள்ளார்.
ஒருவாரத்திற்குப்
பின்னரும் பணம் வராததால் ராஜ்பிரதாப்,
ஆறுமுகம் கும்பலிடம் பணம் கேட்டுள்ளார். அந்த
கும்பலோ நாளொரு பொய்யும், தினமொரு
கதையையும் அவிழ்த்துவிட்டுள்ளது.
கலைப்பொருள்
விற்பனை நிறுவனம் முன்பணம் மற்றும் உத்தரவாத சான்றிதழ் கொடுத்திருப்பதாக, ஒரு புகைப்படத்தைக் காட்டியுள்ளது.
மேலும் பெரிய தொகை என்பதால்
அதற்கான உத்தரவாத சான்றிதழை இந்திய ரிசர்வ் வங்கி
வழங்கியிருப்பதாகவும் நாடகமாடியது.
அந்த சான்றிதழ்களில் டெல்லியின் உயர்மட்ட அதிகாரவர்க்க பிரமுகர்கள் கையெழுத்திட்டிருப்பதாகவும் அந்த கும்பல் கூறியுள்ளது.
இப்படி 7 ஆண்டுகளாக பணத்தைத் தராமல் இழுத்தடிக்கவே சந்தேகமடைந்த
ராஜ்பிரதாப் அவர்கள் காட்டிய சான்றிதழ்கள் பற்றி சோதனை செய்து
பார்த்தபோது அவை போலி எனத்
தெரியவந்தது
இந்நிலையில்,
கடந்த பிப்ரவரி 6-ஆம் தேதி கோவை
மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் இரிடியம் மோசடியில் ஈடுபட்டதாக ஆறுமுகம் கைது செய்யப்பட்ட செய்தி,
ராஜ் பிரதாப்பிற்கு தெரிய வந்துள்ளது
ஆறுமுகம்,
தனபால், ஜோதிடர் பரமேஸ்வரன் உள்ளிட்டோர் கும்பலாக சேர்ந்து கோவை, திருப்பூர் உள்ளிட்ட
இடங்களில் இது போன்று ஏராளமானவர்களிடம்
மோசடியில் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது. இதை
அடுத்து 8 ஆண்டுகளுக்கு பிறகு, தன்னை ஆறுமுகம்
தலைமையிலான கும்பல் ஏமாற்றிவிட்டதாக, ராஜ்பிரதாப் திருப்பூர் காவல் ஆணையர் அலுவலகத்தில்
புகார் அளித்துள்ளார். புகாரைப் பெற்ற காவல் துணை
ஆணையர் அனுப்பர்பாளையம் காவல் நிலையத்துக்கு புகாரை
அனுப்பி விசாரிக்க உத்தரவிட்டுள்ளார்.
0 கருத்துகள்