Header Ads Widget

Pop Ads

'சந்தனக் கடத்தல் 'வீரப்பனை காட்டிக் கொடுதது தமிழக மாவோயிஸ்டுகள்" ????

 அதிர வைக்கும் புதிய புத்தகம்  

 
சேலம்: சந்தனக் கடத்தல் வீரப்பனை காட்டிக் கொடுத்ததே தமிழக மாவோயிஸ்டுகள்தான் என குற்றம்சாட்டி புதிய புத்தகம் வெளியாகி இருப்பது பரபரப்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

வீரப்பன்

        தமிழகம், கர்நாடகா, கேரளா, ஆந்திரா என 4 மாநில அரசுகளுக்கு சவாலாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் 30 ஆண்டுகாலம் வீரப்பனின் தனி ராஜ்ஜியம் நடந்து வந்தது. யானை தந்தந்தங்கள் வேட்டை, சந்தன மரங்கள் கடத்தல் என காட்டுக்குள் வீரப்பன் ராஜ்ஜியம் கோலோச்சிய காலம் இருந்தது.

  சந்தனக் கடத்தல் வீரப்பனை பிடிக்கும் நடவடிக்கைகளில் அதிகாரிகள் உட்பட பல நூறு போலீசார் மாண்டு போயினர். இந்த தேடுதல் நடவடிக்கைகளில் போலீசார், அதிரடிப்படையில் பலாத்காரம் உள்ளிட்ட பல்வேறு மோசமான குற்றங்களில் ஈடுபட்டதால் தண்டனையும் பெற்றனர்.

வீரப்பன் வேட்டை

    2004-ம் ஆண்டு அக்டோபர் 18-ந் தேதி சந்தனக் கடத்தல் வீரப்பனை தமிழக அதிரடிப்படை சுட்டுக் கொன்றது. ஆனால் அதிரடிப்படை எப்படி வீரப்பனை சுட்டுக் கொன்றது? என்கிற மர்மம் பல்வேறு யூகங்களாகவே சொல்லப்பட்டு வருகிறது.

வீரப்பன் பற்றிய புத்தகம் 

    இந்நிலையில் சந்தனக் கடத்தல் வீரப்பனை நக்கீரன் வார இதழுக்காக பல முறை நேரில் சென்று வீடியோ பேட்டி எடுத்த நிருபர் பெ. சிவசுப்பிரமணியம், வீரப்பன் வாழ்ந்ததும் வீழ்ந்ததும் என்ற தலைப்பில் புத்தகங்களை எழுதி வருகிறார். 

Brave Man Siva sir

இந்த புத்தகங்களில் வீரப்பன் விவகாரத்தில் வெளி உலகம் அறியாத பல்வேறு தகவல்கள் இடம்பெற்றுள்ளன.

காட்டி கொடுத்த மாவோயிஸ்டுகள் 

    தற்போது வீரப்பன் வாழ்ந்ததும் வீழ்ந்ததும் 4-வது நூல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த புத்தகத்தில் வீரப்பன் காட்டிக் கொடுக்கப்பட்டது பற்றி விவரித்துள்ளார் சிவசுப்பிரமணியம். அந்த புத்தகத்தில், தமிழக மாவோயிஸ்டுகளுக்கும் வீரப்பனுக்கும் தொடர்பு ஏற்பட்டிருந்தது. 

4th Book

இதில் தமிழக மாவோயிஸ்ட் இயக்கத்தின் எஸ்.எம். என்ற சுந்தரமூர்த்திதான் அதிரடிப்படை போலீசார் விரித்த வல்லையில் சிக்கி உளவாளியானது பற்றி விவரிக்கப்பட்டுள்ளது.

போலீசாரின் உளவாளியான மாவோயிஸ்ட் 

       இந்த புத்தகத்தில், ஏற்கனவே தலைமறைவு வாழ்க்கையில் வெறுத்துப் போய் இருந்த சந்தரமூர்த்திக்கு பல்வேறு வகையான வசதிகளைப் போலீசார் செய்து கொடுத்தனர். போலீசாரின் பல்வேறு விதமான நெருக்குதலுக்குப் பின்னர் சுந்தரமூர்த்தியும் அதிரடிப்படை உளவாளியாக மாறினார். 

"எங்களுக்கு தேவை வீரப்பன் மட்டுமே.. அந்த டாஸ்க்கை முடித்தால் போதும்.. உன்னை பற்றி எங்களுக்குக் கவலை இல்லை. உன்னை கைது செய்யமாட்டோம் என தரப்பட்ட உறுதி மொழியின் அடிப்படையில் சுந்தரமூர்த்திக்கும் அதிரடிப்படைக்கும் உடன்பாடு ஏற்பட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது.


துப்பாக்கிகள், கையெறி குண்டுகள் 

       இதன்பின்னரே வீரப்பனுக்கு 2 .ஏ.கே.47 துப்பாக்கிகள் கொடுத்து அனுப்பப்பட்டன; 6 கையெறி குண்டுகள், துப்பாக்கி தோட்டாக்களும் வீரப்பனுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. 
என விவரிக்கிறது இந்த நூல். சந்தனக் கடத்தல் வீரப்பன் காட்டிக் கொடுக்கப்பட்டே கொல்லப்பட்டார் என்பதை ஏராளமான தகவல்களுடன் விவரிக்கிறது சிவசுப்பிரமணியத்தின் இந்த நூல்.





கருத்துரையிடுக

0 கருத்துகள்