மேட்டூர்:
கொளத்தூர் வனப் பகுதி கோவிலில் வீரப்பன் உயிருடன் இருந்த காலத்தில் 12 ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த திருவிழா வீரப்பனின் மரணத்தையடுத்து கோவிலில் திருவிழா நடக்கிறது.
பெரியதண்டா காட்டுப் பகுதியில் உள்ளது மூலநடுவு கிராமம். இங்கு ஒசாடாப்பன் என்ற ஒசாடசின்னப்ப சாமி கோவில் உள்ளது.இங்குள்ள மலைப் பகுதி மக்களான குரும்பர் இனத்தினரின் குல தெய்வம் இது.
வீரப்பன் கட்டிய கோவில் மணி
வீரப்பன் உயிருடன் இருந்த காலத்தில் இந்தப் பகுதியில் வீரப்பன் நடமாட்டம் இருந்ததால், இங்கு பொது மக்கள் வந்து செல்ல அதிரடிப்படை தடை விதித்திருந்தது. இந்தக்கோவிலில் வீரப்பன் ஒரு மணியைக் கட்டியிருந்தான். அதில் வீரப்பன் உபயம் என்றும் பொறிக்கப்பட்டுள்ளது.
வீரப்பன் மற்றும் அதிரடிப்படைரின் மிரட்டல்களால் கடந்த 12 ஆண்டுகளாக இந்தக் கோவிலில் திருவிழாவே நடத்தப்படவில்லை. இப்போது வீரப்பன் இறந்துவிட்டதால், இப் பகுதி மக்களுக்கு மீண்டும் சுதந்திரம் கிடைத்துள்ளது. இதையடுத்து 12 ஆண்டுகளுக்குமுன் கைவிடப்பட்ட கோவில் திருவிழாவை நடத்தி கொண்டுருக்கின்றனர்.
கிராமத்திலிருந்து இந்த கோவிலுக்கு செல்ல காட்டு பகுதி வழியாகத்தான் செல்ல முடியும், அனால் காட்டுப்பகுதியில் யானைகள் நடமாட்டம் அதிகம் இருப்பதால் மற்ற நாட்களில் மக்கள் செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளது. கோவில் திருவிழா நாட்கள் மற்றும் அமாவாசை நாட்களில் மட்டும் மக்கள் வனதுறை அனுமதியுடன் மக்கள் சென்று வழிபாடு தடத்துவார்கள்.
அம்மாவாசை தேதிகளில் இந்த விழா நடக்கிறது. குறும்பனூர், ஜரத்தல், பெரியதண்டா, நவரை மத்திக்காடு, கண்ணாமூச்சிஆகிய பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் இந்த கோவிலுக்கு வந்து வழிபடுவார்கள்.
இப்போது வீரப்பன் இல்லாவிட்டாலும் கோவிலில் அவன் கட்டிய மணிஅப்படியே உள்ளது.
0 கருத்துகள்