27 வருடம் சிறை வாசம்.. மைசூர் சிறையில் மரணமடைந்த வீரப்பன் கூட்டாளி பிலவேந்திரன்
கன்னட நடிகர் ராஜ்குமாரை கடத்திய வீரப்பன்... திக் திக் கதை பிலவேந்திரன் கர்நாடக மாநிலம் கொள்ளேகால் அருகே உள்ள மாட்டல்லி கிராமத்தை சேர்ந்தவர். 1993 ம் ஆண்டு கர்நாடக அதிரடிப்படையால் கைது செய்யப்பட்டு 27 ஆண்டுகளாக சிறையில் இருந்தார்.
இவர் மட்டுமல்ல தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட சைமன், மாதையன், ஞானபிரகாசம் ஆகிய நான்கு வீரப்பன் கூட்டாளிகளுக்கும், தூக்குதண்டனை விதிக்கப்பட்டு உச்சநீதிமன்ற சீராய்வு மனு விசாரணையில் அது ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.
சைமன் ஏற்கனவே 2018ம் ஆண்டு, உயிரிழந்த நிலையில் வியாழக்கிழமை பிலவேந்திரனும் மரணமடைந்தார். மைசூர் சிறையில் உடல் நலக்குறைவால் சில தினங்களுக்கு முன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார். பாலாறு வனப்பகுதியில் வீரப்பன் வைத்திருந்த கண்ணிவெடியில் சிக்கி 22 பேர் உயிரிழந்தனர். இந்த வழக்கு உட்பட மூன்று வழக்கில் பிலவேந்திரன் பெயரும் சேர்க்கப்பட்டு தண்டனை பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
0 கருத்துகள்