Header Ads Widget

Pop Ads

'வீரப்பன் தேடுதல் வேட்டையில் 'மருத்துவ அவசர ஊர்தி'"

               'மருத்துவ அவசர ஊர்தி'

தேடுதல் வேட்டை

    வீரப்பன் தேடுதல் வேட்டையில் விஜயகுமார் தலைமையில் அமைந்த குழு ஆபரேஷன் Cocoon என்ற அமைப்பு அமைக்கப்பட்டு வீரப்பன் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டது. இந்நிலையில் வீரப்பன் இறப்பிற்குப் பின்பு நிறைய மரங்கள் நிறைந்து உள்ளன என்று மக்கள் பலர் கூறினாலும் நம்முடைய கள ஆய்வில் தெரிந்த தகவல் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். அதாவது வீரப்பன் வேட்டையில் ஈடுபடுத்தப்பட்ட ஆம்புலன்ஸ் பற்றிய தகவல் இது.



வீரப்பன் வேட்டையில் பயன்படுத்தப்பட்ட ஆம்புலன்ஸ் புதுக்கோட்டை Registration கொண்ட ஒரு காவல்துறை வேன் (Riot Control Vehicle) போன்ற அமைப்பு கொண்ட ஒரு வாகனம் ஆகும். இந்த வாகனம் பார்ப்பதற்கு ஆம்புலன்ஸ் போன்ற அமைப்பைக் கொண்டிருக்கும், இந்த வாகனத்தை காவல்துறையினர் கலவரம் மற்றும் பெரிய இக்கட்டான சூழ்நிலையில் மட்டுமே பயன்படுத்துவார்கள். 

வீரப்பன் என்கவுண்டருக்கு அடுத்து வீரப்பன் மற்றும் அவரின் கூட்டாளிகளின் உடல்கள் அரசு மருத்துவமனை தர்மபுரியில் வைக்கப்பட்டிருந்தது, என்கவுண்டருக்கு பயன்படுத்தப்பட்ட ஆம்புலன்ஸ் போன்ற தோற்றம் கொண்ட அந்த Riot Control வாகனம் அரசு மருத்துவமனைக்கு பின்னாடி உள்ள ஆயுதப்படை காவல் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்தது. நமது குழுவுடன் அங்கு சென்று அந்த வாகனத்தை பற்றிய தகவலை கேட்டு அறிந்தோம்

வெளிப்பக்கத்திலிருந்து நுற்றுக்கணக்கான
துப்பாக்கி குண்டுகள் வீரப்பன் இருந்த வாகனத்தில் பாய்ந்தது வாகனம் உள்பக்கத்தில் எந்த ஒரு குண்டும் வெளியே பாயவில்லை மேலும் இந்த வாகனத்தில் வெளிப்புறத்தில் SKS Hospital SELAM என்ற பெயர் பொறிக்கப்பட்டு இருந்தது.


மேலும் இந்த வாகனம் புதுக்கோட்டைக்கு எடுத்து செல்லப்பட்டு அங்கு ஏலம் விடப்பட்டது.

அதிரடிப்படையின் செயல்பட்டால் இந்த வாகனம் அவசரமாக இடம் மாற்றப்பட்டு அதில் உள்ள தடயம் அழிக்கப்பட்டது. மேலும் இந்த வாகனத்தை ஒட்டிய காவல் இன்னும் தர்மபுரி காவலர்  துறையில் வேலை செய்துகொண்டுருக்கிறார்.

இது பற்றிய உங்கள் கருத்து???

கருத்துரையிடுக

0 கருத்துகள்