ஆந்திர மாநில செம்மரக்கடத்தலில் வீரப்பன் கூட்டாளி தொடர்பா???
ஆந்திர மாநிலத்தில் செம்மரக் கடத்தல் இப்பொழுது பெரும் தலைவலியாக உருவெடுத்துள்ளது என்று ஆந்திர மாநில காவல்துறையினர் சந்தேகப்படுகின்றனர். இந்த செம்மரக்கடத்தலில் வீரப்பனின் கூட்டாளிகள் ஈடுபட்டுள்ளார்கள் என ஆந்திர மாநில போலீஸ் சந்தேகப்படுகின்றனர்.
ஆந்திர மாநில வனப்பகுதியில் சேசாலம் என்ற பகுதியில் சந்தன மரங்கள் கடத்தப் படுவதாக வந்த செய்தியின் அடிப்படையில் ஆந்திர போலீசார் அங்கு விரைந்தனர் அப்போது அவருக்கும் சந்தன மரக் கடத்தலில் ஈடுபட்டவருக்கும் நடந்த தகராறில் இரண்டு போலீசார்கள் படுகொலை செய்யப்பட்டனர்.
இதனடிப்படையில் தமிழகத்தைச் சேர்ந்த 400 பேரை ஆந்திர காவல்துறையினர் கைது செய்துள்ளனர் இந்த சந்தன மரக் கடத்தல் வீரப்பனின் கூட்டாளிகள் ஈடுபட்டிருக்கலாம் என்ற கோணத்தில் ஆந்திர மாநில காவல்துறை விசாரணை செய்து வருகின்றது.
0 கருத்துகள்