Date : 2001 Feb 16 அன்று வெளியான செய்தி
கைது செய்ய பட்டாரா??? "சேத்துக்குளி கோவிந்தன்"
மக்களுக்கு சொல்லப்பட்ட செய்தி
சந்தனக் கடத்தல் வீரப்பனின் இன்னொரு கூட்டாளியான சேத்துக்குளி கோவிந்தனைக் கூட்டு அதிரடிப்படை போலீஸார் வெள்ளிக்கிழமை காலை 9.30மணிக்கு கைது செய்தனர்.
![]() |
Sethukuli Govindan |
கர்நாடக-
தமிழக அதிரப்படை வீரர்கள் சிறுவாணி காட்டில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்த
போது அங்கு நடமாடிக் கொண்டிருந்த
சேத்துக்குளிகோவிந்தனை போலீஸார் சுற்றி வளைத்துக் கைது செய்தனர்.
முன்னதாக வீரப்பனின் கூட்டாளியான கோவிந்தன் குறித்துத் தகவல்கள் கொடுப்பவர்களுக்கு பரிசுத் தொகை அறிவிக்கப்படும் என்று போலீஸார்ஏற்கனவே அறிவித்திருந்தார்.
![]() |
Veerappan |
இதற்கிடையே, வீரப்பனும் அவரது கூட்டாளிகளும் அவர்களுக்குள்
ஏற்பட்ட பிரச்சனை காரணமாகப் பிரிந்தனர்.
அப்போது மாறன் மட்டும்வீரப்பனுடன் இருந்தார். கூட்டாளிகள் சேத்துக்குளி கோவிந்தன், சந்திரா கவுடர், ஆலப்பாக்கம் முருகேசன் மற்றும் செல்வம் ஆகியோர் தனித்தனியாகப்பிரிந்து விட்டனர்
என்பது நினைவிருக்கலாம். முன்னதாக, புதன்கிழமை இரவு வீரப்பனின் நெருங்கிய கூட்டாளியும், தமிழ்நாடு விடுதலைப் படை அமைப்பின் தலைவருமான மாறன் கைது செய்யப்பட்டார்
என்பது குறிப்பிடத்தக்கது.
Note :
இந்த செய்தி உண்மை இல்லை இது பொய்யாக சொல்லப் பட்ட செய்தி.
உண்மை செய்தி அடுத்த பதிவில் காண்போம்.
0 கருத்துகள்