உண்மை மறைத்து சொல்லப்பட்ட வீரப்பனின் வரலாறு
வீரப்பன் எனப்படும் கூசு. முனிசாமி வீரப்பக்கவுண்டர் ( Jan 18, 1952 - Oct 18, 2004)சந்தனக்கடத்தல் வீரப்பன் என்று அழைக்கப்படுபவர்.
அறிமுகம்
தந்தங்களுக்காக யானைகளைக் கொன்றவர்.சந்தனக்கட்டை கடத்தல் செய்தவர். சத்தியமங்கலம் காட்டுப் பகுதியில் மறைந்து வாழ்ந்தார். பல வருடங்களாக வீரப்பன் தமிழக, கருநாடக, கேரளா அரசுகளுக்கு பெரும் சவாலாக விளங்கினார்.ஒரு கட்டத்தில் சிலநூறு பேர் கொண்ட படையே தனக்கென வைத்திருந்தார்.மேலும் வீரப்பன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றங்கள் பின்வருவன.
![]() |
Veerappan |
இவர் 184 பேரை கொன்றதற்காகவும் (அதில் பாதிக்கு மேற்பட்டோர் போலீஸ்காரர்கள், வனத்துறை மற்றும் போலீஸ் உயர் அதிகாரிகள் ஆவர்),தந்தத்திற்காக சட்ட விரோதமாக 200க்கும் அதிகமான யானைகளை கொன்றதற்காகவும் தேடப்பட்டு வந்தார்.$2,600,000 (இந்திய மதிப்பு சுமார் 5 கோடி) மதிப்பிலான தந்தங்கள் கடத்தல்களில் ஈடுபட்டதற்காகவும், US $22,000,000(இந்திய மதிப்பு சுமார் 130 கோடி) மதிப்பிலான சந்தன மரங்களை கடத்தியதர்காகவும் தேடப்பட்டுவந்தார்.
2004 இல் விஜயகுமார் தலைமையிலான தமிழ்நாடு சிறப்புக் காவல்படையினரால் கொல்லப்பட்டார்.
ஆரம்ப வாழ்கை
வீரப்பன் 18 சனவரி, 1952 ஆம் ஆண்டு கர்நாடக மாநில எல்லைப்பகுதியான கோபிநத்தம் என்னும் கிராமத்தில் பிறந்தார். இவருக்கு ஆஸ்த்மா பாதிப்பு இருந்தது. வீரப்பன் மலையூர் மம்மட்டியான் என்ற கைதேர்ந்த கொள்ளையனின் செயல்களால் ஈர்க்கப்பட்டார். மம்மட்டியான் இரு கொள்ளை குழுக்களுக்கு நடுவே நடந்த சண்டையில் கொல்லப்பட்டார்.
![]() |
Veerappan and his Associates in Forest |
மம்மட்டியானை கொன்றவரின் சகோதரனை கொன்றதே வீரப்பன் செய்த முதல் கொலையாகும்.
குடும்பம்
வீரப்பனுக்கு முத்துலெட்சுமி என்ற மனைவியும் இரு மகள்களும் உள்ளனர்.
![]() |
Veerappan Family |
குற்றவாளி வாழ்க்கை
சந்தனமர கடத்தல் செய்த தனது உறவினர் செவி கவுண்டரிடம் உதவியாளராக சேர்ந்து தனது குற்றவாளி வாழ்க்கையை தொடங்கினார் வீரப்பன். 1972 ஆம் ஆன்று முதன்முறையாக வீரப்பன் கைது செய்யப்பட்டார்.
![]() |
Video Available in mr arai kodam YouTube channel |
சந்தனமரம் கடத்தல் மற்றும் யானைகளை கொன்று அதன் தந்தங்களை கடத்தல் போன்ற சம்பவங்களை ஆரம்ப நாட்களில் வீரப்பன் செய்து வந்தார். பிறகு, தன் குற்றங்களில் குறுக்கிடுபவர்களையும் கொல்ல ஆரம்பித்தார். பதினேழு வயதில் தனது முதல் கொலையை செய்தார் வீரப்பன். காவலர்கள், வனத்துறை அதிகாரிகள் மற்றும் துப்பு கொடுப்பவர்களே வீரப்பனால் கொல்லப்பட்டவர்கள் பட்டியலில் அடங்குவர்.
1987 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் இருந்த சிதம்பரம் எனும் வனத்துறை அதிகாரியை கடத்தி கொன்றார். இந்த கொலை சம்பவம் மூலம் இந்திய அரசின் கவனம் அவர் பக்கம் முதன்முதலாக திரும்பியது. 1991 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பண்டில்லாப்பல்லி ஸ்ரீநிவாஸ் எனும் வனத்துறை அதிகாரியை கொன்றார். அதற்கு அடுத்த வருடம் ஆகத்து மாதம் உயர் காவல்துறை அதிகாரி ஹரிகிரிஷ்ணா உட்பட பல காவல்துறையினர் சென்ற வழியில் இடைமறித்து தாக்கி கொன்றார்.
மக்கள் தொடர்பு
நக்கீரன் ஆசிரியர் கோபால், பல நேரங்களில் வீரப்பனை நேரடியாக சந்தித்து மக்களுக்கு வீரப்பன் பற்றிய செய்திகளை உண்மையாக எழுதினார். இவருடைய வரலாறு சந்தனக்காடு என்ற தொடராக இயக்குனர் வ. கவுதமன் அவர்களால் இயக்கப்பட்டு மக்கள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகியது.
முடிவுரை
காவல்துறையின் சிறப்பு அதிரடி படையின் முன்னாள் தலைவர் கி. விஜயகுமார் சனவரி, 2017 ஆம் ஆண்டு வீரப்பன்: சேஷிங் தி பிரிகண்ட் எனும் தலைப்பில் நூலாக வெளியிட்டுள்ளார்.
![]() |
K Vijay Kumar |
0 கருத்துகள்