வீரப்பன் கும்பலில் "இளம் வாலிபர்"
வீரப்பன் கூட்டாளி
வீரப்பன் கும்பலுடன் சேர்ந்து கர்நாடக முன்னாள் அமைச்சரைக் கடத்தியதில் கும்பகோணத்தைச் சேர்ந்த ஒரு முக்கிய புள்ளிக்கும்தொடர்புள்ளதாகத் தெரியவந்துள்ளது. இவர் தலைமறைவாகிவிட்டதால் இவரைப் பிடிக்க தனிப் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
![]() |
Veerappan Gang member Sethu Mani |
கும்பகோணம் சாந்தம்பாடியைச் சேர்ந்த இந்த நபரின் பெயர் சேதுமணி (வயது 25). நாகப்பாவை வீரப்பன் கடத்திய போதுஅந்தக் குழுவில் சேதுமணியும் இடம் பெற்றிருந்ததாகக் கூறப்படுகிறது.
சமீபத்தில் நாகப்பா கடத்தில் தொடர்பாக தமிழகத்திலும்கர்நாடகத்திலும் பிடிபட்ட 12 பேரிடமும் அதிரடிப்படையினர் நடத்திய விசாரணையில் இந்த சேதுமணி குறித்துத் தெரியவந்தது.
![]() |
Sethu Mani Family |
நாகப்பா கொலைக்குப் பிறகு வீரப்பன் கும்பல் பல குழுக்காகப் பிரிந்ததாகவும் இதில் சேதுமணி மீண்டும் கும்பகோணத்துக்கேதிரும்பிவிட்டதாகவும் தெரியவந்தது.
இதையடுத்து சேதுமணியைப் பிடிக்க கும்பகோணம் போலீசார் முயன்றனர். ஆனால், அதற்குள் சேதுமணி தலைமறைவாகிவிட்டார்.
நாகப்பாவை வீரப்பன் கடத்துவதற்கு சில மாதங்களுக்கு முன்புதான் சேதுமணி, வீரப்பன் கும்பலில்சேர்ந்ததாகக் கூறப்படுகிறது.
நாகப்பாவை வீரப்பன் கடத்தத் திட்டம் போட்டதே இந்த சேதுமணி தான் என்று தெரியவந்துள்ளது.
தலைமறைவாகிவிட்ட சேதுமணியைப் பிடிக்கும் பணியில் தமிழக போலீசாரும் அதிரடிப்படையினரும் தீவிரமாகஈடுபட்டுள்ளனர்.
இதற்காக தனிப் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
குறிப்பு
https://youtu.be/-m318mSJnUY
0 கருத்துகள்