வீரப்பனும் அவனது கூட்டாளிகளும் விஷம் வைத்து கொல்லப்படவில்லை என்று "ரசாயன பரிசோதனை ஆய்வில் கூறப்பட்டுள்ளது".
'விஷம் வைத்து கொல்லப்படவில்லை'
கடந்த ஆண்டு அக்டோபர் 18ம் தேதி வீரப்பனும் அவனது கூட்டாளிகளும் தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அருகே மலைக்கிராமத்தில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டனர்.
வீரப்பன் கும்பலுடன் நடந்த மோதலில் அவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாக அதிரடிப்படை கூறியது.
ஆனால், வீரப்பனும், அவனது கூட்டாளிகளும் மயக்க மருந்து கொடுத்து பிடிக்கப்பட்டு, சித்திரவதை செய்யப்பட்டும், பின்னர் விஷம்கொடுத்துக் கொல்லப்பட்டதாக
உண்மை கண்டறியும் குழுவினரும் வீரப்பனின் மனைவி கூறுகின்றனர்.
இந்நிலையில் வீரப்பன் விஷம் வைத்துக் கொல்லப்படவில்லை என்று ரசாயன பரிசோதனையில் தெரியவந்துள்ளதாக கூறப்படுகிறது.
வீரப்பன் உயிருடன் இருக்கும்போதே அவனது உடலில் துப்பாக்கிக் குண்டுகள் பாய்ந்துள்ளதாகவும், அதன் காரணமாகவே அவனும்,கூட்டாளிகளும் இறந்துள்ளதாக, தடயவியல் பிரிவின் ரசாயனப் பரிசோதனை முடிவுகள் தெரிவிக்கின்றன.
0 கருத்துகள்