Date :22 March 2001அன்று வெளியான செய்தி
தமிழ்நாடு-கேரள எல்லையில் "வீரப்பன் கும்பலுடன் அதிரடிப்படை மோதல்"
மக்களுக்கு சொல்லப்பட்ட செய்தி
தமிழக-கேரள எல்லையிலுள்ள காட்டுப் பகுதியில் வீரப்பன் கும்பலுடன், தமிழக அதிரடிப்படை போலீஸார்நடத்திய தாக்குதலின்போது வீரப்பனும் அங்கு இருந்திருக்கிறான்.
தமிழக, கேரள காட்டுப் பகுதியில் வெள்ளிக்கிழமை நடந்த இந்தத் தாக்குதல் குறித்து தமிழக டி.ஜி.பி.ராஜகோபாலன் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
![]() |
Veerappan in Different Faces |
தமிழகத்தின் கோவை மற்றும் கேரளத்தின் பாலக்காடுமாவட்டத்தின் எல்லையில், உள்ள வாலையாறு என்ற பகுதியில் உள்ள செம்மந்திக்காடு என்ற காட்டுப் பகுதியில்இந்த மோதல் நடந்தது.
![]() |
TamilNadu-Kerala Border |
வெள்ளிக்கிழமை பிற்பகல்வாக்கில் இந்த மோதல் நடந்தது. முதலில், வீரப்பன் கும்பலைச் சேர்ந்த ஒருவன்,அதிரடிப்படை வீரர்கள்
அந்தப் பகுதியில் நடமாடுவதைப் பார்த்து விட்டு, தனது கூட்டாளிகளைஉஷார்படுத்தியுள்ளான்.
பின்னர் தமிழக அதிரடிப்படை போலீஸார் மீது அவன் சுட்டுள்ளான்.
![]() |
Veerappan with His Gang |
போலீஸார்பதிலுக்குச் சுட்டனர். இதை சமாளிக்க முடியாத கும்பல் தங்கள் வசம் வைத்திருந்த பொருட்களை விட்டு விட்டு,காட்டுக்குள் சிதறி ஓடியது.
போலீஸாரை நோக்கிச் சுட்டது சந்திரே கெளடா என்பது தெரிய வந்துள்ளது.
வீரப்பன் கும்பல் விட்டுச் சென்றதோள்பைகளில், கேமரா, வாக்மேன், மைக்ரோ கேசட்டுகள், புளியோதரை உணவு பாக்கெட்டுகள், மருந்துப்பொருட்கள் ஆகியவை இருந்தன.
எந்த நோய்க்கு எந்த மருந்து சாப்பிட வேண்டும் என்ற பட்டியலும் அதில்இருந்தது.
எந்த நோய்க்கு எந்த மருந்து சாப்பிட வேண்டும் என்ற பட்டியலும் அதில்இருந்தது.
கும்பல் தப்பி ஓடும்போது தூரத்தில், வீரப்பன் ஓடியதையும் எங்களது போலீஸார் பார்த்துள்ளனர்.
விரைவில் வீரப்பனைப் பிடித்து விடுவோம்.
விரைவில் வீரப்பனைப் பிடித்து விடுவோம்.
இப்பணியில் ஹெலிகாப்டர்களும் ஈடுபடுத்தப்படவுள்ளது என்றார் "ராஜகோபாலன்".
குறிப்பு:
➤ வீரப்பன் உயிருடன் இருந்த காலத்தில் அவரை பிடிக்க முடியாமல் அதிரடி படை பல பொய்யான தகவலை செய்தியாக கூறினார்
பல உண்மைகள் மறைக்கப்பட்டு சில செய்திகள் வந்தன....
பல உண்மைகள் மறைக்கப்பட்டு சில செய்திகள் வந்தன....
மேலும் தகவல் பெற நமது பதிவை பின் தொடரவும்
0 கருத்துகள்