"உறவினர்களால் பிடிபட்டார் வீரப்பன்???"
வீரப்பனை காட்டிக் கொடுத்தது உறவினர்கள்
வீரப்பனுக்கு மிகவும் நெருக்கமான உறவினர்கள் தான் அதிரடிப்படையினரிடம் அவனை மாட்டி விட்டதாக தர்மபுரி பகுதியில் செய்திகள் உலவுகின்றன. வீரப்பன் செத்து விட்டான்.
இருப்பினும் அவன் இவ்வளவு விரைவில் அதிரடிப்படையினரின் கையில் சிக்கியது பலருக்கு இன்னும் நம்ப முடியாததாக உள்ளது.
வீரப்பன் எப்படி அதிரடிப்படையிடம் சிக்கினான் என்பது குறித்து பல கருத்துக்கள் உலவுகின்றன. அதில் ஒன்று தான்,அவனது உறவினர்களே அதிரடிப்படையிடம் வீரப்பனை சிக்க வைத்து விட்டதாக வரும் செய்தி.
வீரப்பனுக்கு ஆதரவாக இல்லாத அவனது நெருங்கிய உறவினர்களை அதிரடிப்படை அடையாளம் கண்டு தங்களது உளவு வலையில் அவர்களை இழுத்துக் கொண்டது.
அவர்கள் மூலம் வீரப்பனின் இருப்பிடத்தை அறிந்துகொள்வதும், வீரப்பனிடம் தங்களது அதிரடிப்படை வீரர்களை நெருங்க வைப்பதிலும் அதிரடிப்படை வெற்றிகண்டது.
அதிரடிப் படையினர் வலையில் வீரப்பன் விழ வீரப்பனின் மாமனார் பூசாரியின் குடும்பத்தினரும், மைத்துனர் ராஜேந்திரனின் குடும்பத்தினரும் தான் முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது.
பூசாரி மற்றும் ராஜேந்திரனுக்கு சொந்த ஊர் மேட்டூர் அருகே உள்ள சிங்காபுரம். அதிரடிப்படையிடம் சிக்கி இறப்பதற்கு சில மணி நேரங்களுக்கு முன்புதான் ராஜேந்திரனின் வீட்டில் சாப்பிட்டுள்ளான் வீரப்பன்.
அதுதான்அவனது கடைசி விருந்தாகும். பூசாரியும், ராஜேந்திரனும் அதிரடிப்படை பிடியில் பல காலங்களுக்கு முன்பாகவே சிக்கிக் கொண்டு காவலில்உள்ளனர். அவர்களை விடுவிக்க வேண்டுமானால் வீரப்பனை காட்டிக் கொடுத்து விடுமாறு அவர்களதுகுடும்பத்தினரை அதிரடிப்படை பல காலமாகவே கூறி வந்துள்ளது.
பூசாரியும், ராஜேந்திரனும் வீடு வந்து சேர்ந்தால் போதும் என்ற மன நிலைக்கு அவர்களது குடும்பத்தினர் வந்ததும்,அதைப் பயன்படுத்திக் கொண்டு வீரப்பனை பிடிக்க வலை விரித்தது அதிரடிப்படை ராஜேந்திரனின் உறவினர்கள் மூலம் அவனது மனைவி வீட்டுக்கு சாப்பிட வருமாறு வீரப்பனுக்குத் தகவல் போயுள்ளது.
இது வீரப்பனின் மனைவிக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனது சகோதரன் வீட்டுக்கு தானே வீரப்பன் போகிறான் என்று வீரப்பனின் மனைவி கண்டுகொள்ளவில்லை.
வீரப்பனுக்கு விருந்து
விருந்துக்கு வரவழைக்கப்பட்ட வீரப்பன் அங்கு தனது சகாக்களோடு சாப்பிட்டுள்ளான். பின்னர் ராஜேந்திரன்குடும்பத்தினரின் ஏற்பாட்டின்படி கண் சிகிச்சைக்காக ஆம்புலன்ஸில் அனுப்பப்பட்டுள்ளான்.
அந்த ஆம்புலன்ஸ்நேராக பாடி சென்று நின்றது. அங்கு வைத்து வீரப்பனை அதிரடிப்படையினர் சுட்டு வீழ்த்தியுள்ளனர்.
வீரப்பனுக்கு உடல் நலம் சரியில்லை, கண் பார்வை மங்கி வருவதாக அதிரடிப்படையினருக்கு வீரப்பனின்உறவினர்கள்தான் தகவல் கொடுத்துள்ளனர் என்றும் கூறப்படுகிறது.
கடந்த செப்டம்பர் 1-ம் தேதி கோபிநத்தம் கிராமத்தில் நடந்த கிராமத்து திருவிழாவுக்கு வீரப்பன் ரகசியமாக வந்துள்ளான். தனது சின்னம்மா மாரக்காள் என்பவரை சந்தித்துள்ளான்.
அப்போது தனது கண் பார்வை சரியில்லை என்றுவீரப்பன் கூறியுள்ளான். அந்தத் தகவலை மாரக்காள்தான் அதிரடிப்படையிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
வீரப்பனை வீழ்த்த அதிரடிப்படைக்கு பெருமளவில் உதவியது சிங்காபுரம் கிராமமும், அங்குள்ள வீரப்பனின்உறவினர்களும்தான் என்பது வீரப்பன் ஆதரவாளர்களிடையே பெரும் கோபத்தை ஏற்படுத்தியிருப்பதாகதெரிகிறது.
அவர்களால் ஆபத்து ஏற்படும் என்று
கருதுவதால், தற்போது சிங்காபுரத்தில் உள்ள
வீரப்பனின்உறவினர்கள் பலர் அங்கிருந்து வெளியேறி
விட்டதாகவும் கூறப்படுகிறது.
குறிப்பு
➤வீரப்பன் இறப்புக்கு பல்வேறு காரணம் சொல்லப்பட்டாலும் அதில் இதுவும் ஒன்று,
➤உண்மை தெரியாமல் பல்வேறு பொய்யான தகவல் நிறைய வெளிவந்தன.
➤போலியான தகவல் மட்டுமே இதுவரை வந்தன.
0 கருத்துகள்